ஏனைய நிறுவனங்களுடன் போட்டிபோட்டுக்கொண்டு அதிசிறந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவரும் Samsung நிறுவனமானது Galaxy Core என்ற டுவல் சிம் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
4.3 அங்குல அளவுடைய WVGA தொழில்நுட்பத்தினைக் |
ஞாயிறு, 28 ஏப்ரல், 2013
Samsung அறிமுகப்படுத்தும் டுவல் சிம் கைப்பேசி: Galaxy Core
வெள்ளி, 26 ஏப்ரல், 2013
கோவை தீ விபத்தில் 4 பேர் பலி: தாஜ் மஹால் அருகே வெடிப்பில் 2 பேர் பலி
இந்தியாவின், கோவையில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு பெண்கள் உள்டப 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சியில் அரச அலுவலகமொன்றில் பெண் ஊழியர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்
கிளிநொச்சியிலுள்ள உதவி அரசாங்க அதிபர் பிரிவில் கடமையாற்றுகின்ற ஒரு சில
உயரதிகாரியினால் அங்கு கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்கள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
புதன், 24 ஏப்ரல், 2013
புத்தாடை வாங்கிக் கொடுக்காமையால் தூக்கில் தொங்கி மரணமான யுவதி
புதுவருடத்தை முன்னிட்டு தந்தை தனது இளைய சகோதரிக்கு மட்டும் புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தமையால் மனமுடைந்த சகோதரி தன்னுயிரை மாய்க்க தூக்கில் தொங்கி மரணமான சம்பவம் வவுனியா குருமண்காடு எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
Nokia Lumia 928 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகமாகின்றது
முன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் நோக்கிய நிறுவனம் அறிமுகப்படுத்திய Lumia 920 ஸ்மார்ட் கைப்பேசியின் மற்றுமொரு பதிப்பாக Nokia Lumia 928 எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.Verizon நிறுவனம் எதிர்வரும் மார்ச் 22ம் திகதி அறிமுகப்படுத்தவிருக்கின்றது. |
செவ்வாய், 23 ஏப்ரல், 2013
தேவையற்ற இரைச்சல்களை நீக்க உதவும் அப்பிளிக்கேஷன்
ஒலிப் பதிவு ஒன்றின்போது ஏற்படும் தேவையற்ற இரைச்சல்களை அதிலிருந்து நீக்குவதற்கு Vocal Remover எனும் அப்பிளிக்கேஷன் உதவுகின்றது.இந்த அப்பிளிக்கேஷனானது ஸ்டீரியோ சேனல்களின் 180 டிகிரியில் உருவாக்கப்படும் இரைச்சல்களை துல்லியமாக நீக்கக்கூடியதாகவும், இரண்டு சேனல்களினதும் தரத்தை அதிகரிக்கக்கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த அப்பிளிக்கேஷனை தனியாக இயக்க முடியாது காணப்படுவதுடன் Winamp மற்றும் DirectX போன்ற மென்பொருட்களுடன் இணைத்தே பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரவிறக்கச்சுட்டி
|
திங்கள், 22 ஏப்ரல், 2013
நாங்கள் பொதுமக்களை கொடுமைப்படுத்தவில்லை; உலகிற்கு மின்னஞ்சல் அனுப்புகிறது இராணுவம்
இராணுவம் பொதுமக்களை கொடுமைப்படுத்தவில்லை என்பதை முழு உலக நாடுகளுக்கும் தெரியப்படுத்துவதற்காக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பும் பணிகள் இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய நாளாந்தம் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதாக கிளிநொச்சியின் ஐந்தாவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் அஜித் பி. விக்ரமசேகர தெரிவித்துள்ளார்.
எல்.ரி.ரி.ஈ.யின் தலைமையகமாக இருந்து வந்த கிளிநொச்சியில், இடம்பெயர்ந்த மக்களுக்கென இராணுவம் நாளாந்தம் செய்யும் பணிகள் பற்றிய ஆதாரபூர்வமான விபரங்கள் இதன் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.
உலகெங்கிலும் இருக்கும் அரசியல்வாதிகள், அரசாங்கத் தலைவர்கள், கல்விமான்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், நீதிபதிகள் உட்பட முக்கிய தலைவர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காக தினமும் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் மின்னஞ்சல்கள் அனுப்பப் படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய நாளாந்தம் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதாக கிளிநொச்சியின் ஐந்தாவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் அஜித் பி. விக்ரமசேகர தெரிவித்துள்ளார்.
எல்.ரி.ரி.ஈ.யின் தலைமையகமாக இருந்து வந்த கிளிநொச்சியில், இடம்பெயர்ந்த மக்களுக்கென இராணுவம் நாளாந்தம் செய்யும் பணிகள் பற்றிய ஆதாரபூர்வமான விபரங்கள் இதன் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.
உலகெங்கிலும் இருக்கும் அரசியல்வாதிகள், அரசாங்கத் தலைவர்கள், கல்விமான்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், நீதிபதிகள் உட்பட முக்கிய தலைவர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காக தினமும் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் மின்னஞ்சல்கள் அனுப்பப் படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளி, 19 ஏப்ரல், 2013
பொஸ்டன் மரதன் குண்டுவெடிப்பு: சந்தேக நபர்களின் படங்களை வெளியிட்டது எப்.பி.ஐ
அமெரிக்காவின் பொஸ்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் சந்தேக நபர்கள் இருவரின் படங்கள் மற்றும் காணொளிகளை எப்.பி.ஐ. வெளியிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது
அனுராதபுரத்தில் 90% மக்களுக்கு தாகம் எடுப்பதில்லை?
அனுராதபுரத்தில் 90 சதவீதமான மக்கள் தாகத்தை உணர்வதில்லையென்ற அதிர்ச்சிகர தகவல் ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகியுள்ளது.
அம் மாவட்டத்தில் மக்கள் சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்படுகின்றமை அதிகரித்து வருவது தொடர்பில் வைத்தியர்கள் ஆராய்ந்த போது தாகத்தை உணராமை தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இவ்விடயம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் வைத்தியர்களும் தங்களுக்கு தாகம் எடுக்கவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க சுகாதர அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாண் விலை அதிகரிக்கும் சாத்தியம்
மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவிக்கின்றது.
மின்கட்டண அதிகரிப்பானது மொத்த துறையையும் பாதித்துள்ளதாக அச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கேஸ் விலை, டீசல் விலை வரிசையில் தற்போது மின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அச் சங்கம் தெரிவிக்கின்றது.
இந்நடவடிக்கையானது தமது இலாபத்தை பாதிக்குமென அச்சங்கம் குறிப்பிடுகின்றது.
பரீட்சை மீளாய்வுக்கான விண்ணப்பம் கோரல்
வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி பாடசாலை பரீட்சாத்திகள் அதிபர் மூலமும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் நேரடியாகவும் பரீட்சைகள் திணைக்களத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்: ஜம்இய்யதுல் உலமா எச்சரிக்கை
முஸ்லிம்களை முறையாக வழிநடத்தி வரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு பயங்கரவாத சாயம் பூசுவதற்கு முற்படுவது நாட்டையும் சர்வதேசத்தையும் தவறாக வழிநடத்துவதாக அமையும், எனவே முஸ்லிம்களை சீண்டிப் பார்க்க வேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுபல சேனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பயங்கரவாதத்துடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையை தொடர்பு படுத்தி பொதுபல சேனாவின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில், உமா சபை தேசிய பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாறக் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வியாழன், 18 ஏப்ரல், 2013
மைக்ரோசொப்ட் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் கைக்கடிகாரம்
தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் மற்றும் சம்சுங் நிறுவனம் என்பன ஏற்கனவே ஈடுபட்டுள்ள நேரத்தில் சற்று தாமதமாக மைக்ரோசொப்ட் நிறுவனமும் களத்தில் குதித்துள்ளது.இதன் அடிப்படையில் விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்டதும் 1.5 அங்குல அளவுடைய தொடுதிரையினை உள்ளடக்கியதுமான ஸ்மார்ட் கடிகாரத்தை உருவாக்குவதில் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
மேலும் இக்கைக் கடிகாரமானது சிறிய கணினி ஒன்றினைப் போல செயற்படக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
|
அமெரிக்காவில் மீண்டும் வெடிப்பு: 70 பேர் பலி?
அமெரிக்காவின் டெக்சஸின் வாகோ பகுதியில் அமைந்துள்ள தாவரங்களுக்கான உரம் தயாரிக்கும் நிறுவனமொன்றில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இதில் சிக்கி 70 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிப்பு மிகுந்த சக்திமிக்கதெனவும் இதனால் அருகில் அமைந்திருந்த கட்டிடங்கள் பலவும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற பிரதேசத்திலிருந்து 24 கிலோ மீற்றர் தொலைவில் அதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
புதன், 17 ஏப்ரல், 2013
ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?
நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் . |
ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் பாரிய நிலநடுக்கம்: மத்திய கிழக்கிலும் தாக்கம்!
ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 7.6 ஆக பதிவாகியுள்ளது.
சவுதி, கட்டார், பாரெய்ன், டுபாய் உட்பட மத்திய கிழக்கின் பல பகுதிகளிலும் இது நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவின் புதுடெல்லி, ஆப்கானிஸ்தானிலும் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
இதில் சிக்கி ஈரானில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சிச் சேவை ஆரம்பத்தில் அறிவித்ததாக தெரிவித்தபோதிலும், எவ்வித உயிரிழப்புகளும் பதிவு செய்யப்படவில்லை என ஈரானிய தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அங்கு தொலைபேசித் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
பாகிஸ்தானிலும் பலர் இந் நிலநடுக்கத்தால் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இஸ்லாத்தை அவமதித்ததாகக்கூறி இலங்கை அரச இணையத்தளங்கள் மீது ஹெக்கிங்!
இலங்கை அரசின் 3 இணையத் தளங்கள் ஹெக் செய்யப்பட்டுள்ளன.
பங்களாதேஷைச் சேர்ந்த கிரே ஹெட் வகை ஹெக்கர் குழுக்களில் ஒன்றான எப்பிளேஷ் எவர் என்ற குழுவே இவ் ஹெக்கிங் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிகின்றது.
சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு reprimin.gov.lk, ஆளும் கட்சியின் பிரதம கொறடா govtwhip.gov.lk, தெயட்ட கிருள கண்காட்சி deyatakirula.gov.lkபோன்றவற்றின் உத்தியோகபூர்வ இணைய தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்திய காரணத்தினால் இவ்வாறு தாக்குதல் நடத்தப்படுவதாக ஹெக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தக் கூடிய தகவல்கள் வெளியிடப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது குறித்த இணையத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளன.
அமெரிக்காவில் குண்டு வெடிப்பு!: 3 பேர் பலி, பலரின் நிலை கவலைக்கிடம்
அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் அடுத்தடுத்து நடந்த இரு குண்டுவெடிப்புகளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
பொஸ்டன் நகரில் இன்று நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரதன் போட்டியைக் குறி வைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
திங்கள், 15 ஏப்ரல், 2013
இன, மத, அரசியல், குல பேதங்களை மறந்து நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப் புடன் செயற்படவேண்டும்: பிரதமர்
இன, மத, அரசியல், குல பேதங்களை மறந்து நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப் புடன் செயற்படவேண்டும். பிறந்திருக்கும் புத்தாண்டில் அனைவருக்கும் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் செளபாக்கியம் உதயமாகட்டும் என பிரதமர் தி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சமாதானம், மகிழ்ச்சி மற்றும் செளபாக்கியத்தினை நாட்டில் ஏற்படுத்தும் வகையில் உதயமாகியுள்ள இலங்கையின் மாபெரும் கலாசாரப் பண்டிகை யான சிங்கள, தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியினை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
சூரிய பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசியினை வந்தடை வதுடன் உதயமாகும் புத்தாண்டினை இலங்கையர்களின் வாழ்வில் புதியதொரு பக்கத்தினை ஆரம்பித்து வைக்கும் ஒரு விசேட சந்தர்ப்பமாகக் குறிப்பிடலாம். புதிய அறுவடையின் பின்னர், இந்நாட்டு மக்கள் சுபவேளையில் கலாசார ரீதியான பாரம்பரிய பழக்க, வழக்கங்களின் அடிப்படையில் தமது அன்றாட கருமங்களை ஆரம்பித்து வைப்பதானது எமது ஒற்றுமையினை எடுத்துக் காட்டுகின்றன.
பாக்கியமிக்க இனங்கள் என்ற வகையில் சிங்கள தமிழ் இனத்தவர்கள் உதயமாகும் புதுவருடத்தினை ஒரு களியாட்டமாகக் கருதாது அர்த்தமிக்க ஒரு கலாசாரப் பண்டிகையாக அமைத்துக் கொள்வதற்கு உறுதி பூணுதல் வேண்டும்.
உள்நாட்டுக் கலாசாரம் மற்றும் எமக்கேயுரிய சம்பிரதாயங்களின் ஊடாக ஒற்றுமையுடன் இந்தத் தேசத்தினைக் கட்டியெழுப்பும் பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. அது ஒரு கூட்டு முயற்சியாக இருக்கவேண்டியதுடன், அதற்கான இன, மத, அரசியல், குல பேதங்களை மறந்து சகல இனத்தவர்களும் ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியமாகும் என அவர் தனது புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அம்பியூலன்ஸ் வண்டி விபத்து : மூவர் காயம்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் அம்பியூலன்ஸ் வண்டியொன்று 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி உட்பட மூவர் காயமடைந்து மஸ்கெலியா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கர்ப்பிணித் தாய் ஒருவரை மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு ஸ்டஸ்பி தோட்டத்திற்கு திரும்பும் வழியில் பார்கோ தோட்டத்திற்கு அருகில் அம்பியூலன்ஸ் வண்டி பாதையை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
மேற்படி சம்பவத்திற்கு அதிக வேகம் மற்றும் குடி போதை ஆகியன காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கும் மஸ்கெலிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேச்சு நடத்த தென் கொரியா விடுத்த அழைப்பை நிராகரித்தது வடகொரியா
பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென் கொரியா விடுத்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த பிப்ரவரி மாதம் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. இதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.
எனினும், மீண்டும் ஏவுகணைச் சோதனைகளை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவையும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்காவையும் தாக்குவோம் என்று வடகொரியா அறிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பதற்றத்தைத் தணிப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடகொரியாவுக்கு தென் கொரியா கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது. எனினும், இது தென் கொரியாவின் தந்திரம் என்று கூறி இந்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது. தென் கொரியா தனது மோதல் போக்கைக் கைவிடும் வரை அதனுடன் பேச்சு நடத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று வடகொரிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொரிய தீபகற்பத்தில் நிலவும் போர்ப் பதற்றம் குறித்து விவாதிப்பதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் சென்றார். அவர் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் பியூமியோ கிஷிடாவைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ""ஜப்பானின் பாதுகாப்பை உறுதிசெய்ய அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது'' என்று ஜான் கெர்ரி தெரிவித்தார்.
வடகொரியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் அரசு, தலைநகர் டோக்கியோவைச் சுற்றிலும் பேட்ரியாட் ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ளது.
இதனிடையே, ஜப்பானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இட்சுனோரி ஒனோடரா கூறுகையில், ""சர்வதேச சமூகத்தின் பேச்சைக் கேட்கும்படி வடகொரியாவை அமெரிக்கா மற்றும் ஜப்பானின் மூத்த அமைச்சர்கள் கடுமையாக வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
நாம் சர்வதேச ரீதியில் ஒருங்கிணைந்து செயல்படுவதும், அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடுமாறு வடகொரியாவிடம் உறுதியாகத் தெரிவிப்பதும் முக்கியமானவை'' என்றார்.
ஞாயிறு, 14 ஏப்ரல், 2013
சீனா செல்கிறார் மஹிந்த
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இம்மாத இறுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி செயலக வட்டாரங்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் புதிய ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருடன் பேச்சுக்களை நடத்தவே மஹிந்த பீய்ஜிங் செல்லவுள்ளார்.
பொறுப்புக்கூறல் விவகாரம் மற்றும், பொருளாதார வீழ்ச்சி என்பனவற்றால், சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவிடம் இருந்து மேலதிக உதவிகளைக் கோர சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இழப்பினால், சிறிலங்காவின் ஏற்றுமதி கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்தநிலையில், சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதிலும், நலிந்து வரும் சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதித் துறையை காப்பாற்ற சீனாவிடம் இருந்து ஜிஎஸ்பி சலுகையைப் பெறுவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக சிறிலங்கா அரசுக்கும், சீனாவுக்கும் இடையில் ஆரம்பக்கட்டப் பேச்சுக்களும் நடத்தப்பட்டு, அதற்கு சீனத்தரப்பில் பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்தநிலையில், சிறிலங்கா அதிபரின் பயணத்தின் போது, இந்த விவகாரங்கள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.
|
அவுஸ்திரேலியாவில் 7ஆவது நாளும் தொடர்கிறது; தமிழ் அகதிகளின் உண்ணாவிரதம்
|
சனி, 13 ஏப்ரல், 2013
யாழில் உதயன் அலுவலகம் மீது அதிகாலையில் தாக்குதல்: அச்சு இயந்திரங்களும் எரிப்பு.
யாழ்ப்பாணத்தின் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள உதயன் நாளிதழது பிரதான அலுவலகம் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வெள்ளி, 12 ஏப்ரல், 2013
யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முஸ்லிம் தொழுகை அறை மீது ஓயில் வீச்சு
| ||||
வியாழன், 11 ஏப்ரல், 2013
ஒரு கப் காபியில் கைபேசியை சார்ஜ் செய்யலாம்.
அமெரிக்க நிறுவனம் ஒன்று புதிய சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் உங்களுடைய கைபேசியை சுட சுட காபியோ அல்லது குளு குளு பீரோ இருந்தாலே போதும் தேவையான சார்ஜை செய்துகொள்ளலாம்.
படங்கள் இணைக்கப்பட்டுள்ளது
எபிபானி ஒன் puck என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், சூடான பானம் அல்லது குளிர்ந்த பானங்களிலிருந்து கைபேசிக்கு தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்கிறது.
இந்த புதிய சாதனத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. நீல வண்ணத்திலுள்ள பக்கத்தில் குளிந்த பானத்தை தான் வைக்கவேண்டும். மேலும் சிவப்பு நிறமுடைய பக்கத்தில் சூடான பானங்களை வைத்தாலே செல்போனானது சார்ஜ் செய்யப்படும்.
1816ல் உருவாக்கப்பட்ட ஸ்டீம் என்ஜின் என்ற முறையின் தொழில்நுட்ப தாக்கமே
புதன், 10 ஏப்ரல், 2013
யாழில் சிறுமி ஒருவர் அடித்துக் படுகொலை
யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் அடித்துக் கொலைச் செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இளவாலை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் ரூபன் நிலாஞ்சினி என்ற 9 வயது சிறுமியே இவ்வாறு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடுமையான தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாகவே சிறுமி இறந்துள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் அவரது தந்தையை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் இளவாலை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் ரூபன் நிலாஞ்சினி என்ற 9 வயது சிறுமியே இவ்வாறு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடுமையான தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாகவே சிறுமி இறந்துள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் அவரது தந்தையை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பலஸ்தீனத்தில் சட்ட விரோத யூதக் குடியிருப்புக்களை உடன் நிறுத்த வேண்டும் : அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோள் .
பலஸ்தீன பூமியில் சட்ட விரோத யூதக் குடியிருப்புகள் மேற்கொள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும், அந்நாட்டு மக்களுக்கான அனைத்து உரிமைகளும், அங்கீகாரங்களும் வழங்கப்பட வேண்டுமென்றும் இஸ்லாத்தின் முதலாவது கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸா இஸ்ரேலர்களிடமிருந்து மீட்கப்படுவது அவசியமென்றும்
செவ்வாய், 9 ஏப்ரல், 2013
மாத்தளை மனித புதைகுழியும் - சிறிலங்காவின் மழுப்பலும்
சிறிலங்காவில் மாத்தளை மனித புதைகுழி விவகாரம் பெரும் பரபரப்பை அடைந்துள்ளது. இதன் பின்னணியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் பங்கு உள்ளதாக பரவலாக குற்றச்சாட்டுப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரத்தில் கோத்தாபய ராஜபக்ச குற்றங்களுக்கு உடந்தையாக இருந்திருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டுக் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. குறித்த கேள்விக்கு ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க பதிலளிக்க மறுத்துள்ளார். மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி குறித்து ஆணைக்குழுவை நியமிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, மாத்தளைப் புதைகுழி தொடர்பாக விசாரிக்க அதிபர் ஆணைக்குழுவை நியமிக்கப் போவதான சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவிப்பை ஜேவிபி நிராகரித்துள்ளது. காலத்தை இழுத்தடிக்கவே சிறிலங்கா அரசாங்கம் அதிபர் ஆணைக்குழுவை நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து முறைப்படியான நீதிமன்ற விசாரணைகளே நடத்தப்பட வேண்டும் என்றும் ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். |
Minox அறிமுகப்படுத்தும் அதிநவீன மினி கமெரா
நிழற்படக் கமெராக்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுள் ஒன்றான Minox ஆனது Minox DCC 14.0. எனும் அதிநவீன மினி கமெரா ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.டிஜிட்டல் தொழில்நுட்பத்தினைக் கொண்ட இக்கமெராவானது 14 மெகாபிக்சல் திறன்வாய்ந்ததாகக் காணப்படுகிவதுடன் 640 x 480 Pixel அளவில் வீடியோ பதிவு செய்யக் கூடியதாகவும் காணப்படுகின்றது.
மேலும் இதன் மூலம் AVI வீடியோ கோப்பு வகையையும், JPEG நிழற்படக் கோப்பு வகையையும் பதிவு செய்ய முடியும். இவை தவிர 4x Digital Zoom, 2 அங்குல LCD திரை போன்றனவும் காணப்படுகின்றன.
113.5 கிராம் எடையுள்ள இக்கமெராவின் விலையானது 240 அமெரிக்க டொலர்களாகும்.
திங்கள், 8 ஏப்ரல், 2013
செங்கலடியில் கணவன், மனைவி வெட்டி கொலை
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதி செங்கலடி பிரதேசத்திலுள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் கணவன், மனைவி இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சனி, 6 ஏப்ரல், 2013
பேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக வலைத்தளத்திலிருந்து கணக்கை நீக்க
இன்றைய கணனி உலகில் மக்கள் ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது தங்களுக்கென கணக்கு ஒன்றைக் கொண்டுள்ளனர்.இதன் மூலம் தங்களை நண்பர்களுக்குத் தெரியப்படுத்தவும், நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவுமான பணிகளை மேற்கொள்கின்றனர்.
லண்டனில் எரித்தார் மகிந்தர்
தமிழீழமே தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான ஒரே தீர்வு என்ற அடிப்படையில், சுதந்திர தமிழீழத்திற்கான வாக்கெடுப்பொன்றை ஐ.நா மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி சுமார் 5 ஆயிரம் தமிழர்கள் இன்று இலண்டன் மாநாகரில் திரண்டனர்.
தமிழகத்தில் எழுச்சி பெற்றிருக்கும் மாணவர்களின் போராட்டத்துக்கு தமது பூரண ஆதரவைத் தெரிவித்த ஆர்ப்;பாட்டகாரர்கள், தமிழக சட்டசபையில் தமிழீழ உருவாக்கத்திற்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு தமது நன்றியையும் தெரிவித்தனர்.
அதேவேளை, சிறீலங்காவினால் உலகை ஏமாற்றுவதற்காக தயாரிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் வழங்கும் எந்தத் தீர்வையும் தாம் தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிப்பதாக தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள், இனப் அழிப்பாளன் மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவியையும் பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் எரித்தனர்.
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
இஸ்லாமிய பெண் அடக்குமுறைக்கு எதிராக திறந்த மார்புப் போராட்டம்
நேற்று திறந்த மார்புப் பெண்ணியப் போராட்டக் குழுவான FEMEN பரிசின் பெரிய பள்ளிவாசல் (Grande Mosquée de Paris) முன்பாக இஸ்லாமியக் கொடியை எரித்துப் போராட்டம் நடாத்தியுள்ளனர். FEMEN போராட்டக் குழுவைச் சேர்ந்த மூன்று பெண்கள் salafiste எனப்படும் இஸ்லாமியமதச் சட்டங்களின் கொடியை எரித்துள்ளனர். இஸ்லாமிய மற்றும் அரபுத் தேசங்களில் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைக் கண்டித்துப் போராடும் ஒரு துனிசியப் போராளிப் பெண்ணுக்கு ஆதரவாகத் தமது போராட்டங்களைகப் பரிசில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











