செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

இஸ்லாமிய பெண் அடக்குமுறைக்கு எதிராக திறந்த மார்புப் போராட்டம்


நேற்று திறந்த மார்புப் பெண்ணியப் போராட்டக் குழுவான   FEMEN பரிசின் பெரிய பள்ளிவாசல் (Grande Mosquée de Paris) முன்பாக இஸ்லாமியக் கொடியை எரித்துப் போராட்டம் நடாத்தியுள்ளனர். FEMEN போராட்டக் குழுவைச் சேர்ந்த மூன்று பெண்கள் salafiste எனப்படும் இஸ்லாமியமதச் சட்டங்களின் கொடியை எரித்துள்ளனர். இஸ்லாமிய மற்றும் அரபுத் தேசங்களில் பெண்களுக்கு  எதிரான மனித உரிமை மீறல்களைக் கண்டித்துப் போராடும் ஒரு துனிசியப் போராளிப் பெண்ணுக்கு ஆதரவாகத் தமது போராட்டங்களைகப் பரிசில்
நடத்துகின்றனர். 

இவ்வமைப்பைச் சேர்ந்த இரு பிரெஞ்சுப் பெண்ணும் ஒரு துனிசியப் பெண்ணுமே '"chahada",' பொறிக்கப்பட இஸ்லாமிய நம்பிக்கையைத் தொழில் ரீதியாக்கும் கறுப்புக் கொடியினை பெரிய பள்ளிவாசல் முன்பே எரித்தனர்.  இவர்களின் வழமையான போராட்ட முறையான திறந்து மார்புப் போராட்டத்தில் 'இஸ்லாமியர்களுக்கொதிரான அரபுப் பெண்கள்' , 'பெண்களுக்கான விடுதலை வேண்டும்' மற்றும் ' உங்கள் மனநிலையை மாற்றுங்கள்' போன்ற வாசகங்களை உடலில் பொறித்திருந்தனர். மற்றும் 'தீவிர இஸ்லாமிய மதவாதிகளை எதிர்க்கின்றோம்' எனவும் பொறித்திருந்தனர். 
"அமினா எனப்படும் துனிசியப் பெண் விடுதலைப் போராளிக்கு எமது ஆதரவையும் சகோதரத்துவத்தையும் தெரிவிக்க வந்துள்ளோம். தீவிர salafistes  இஸ்லாமியர்கள் அமினாவைக் கல்லால் அடித்துக் கொல்லுமாறு தீர்ப்பு வழங்கி உள்ளனர். " என FEMEN அமைப்பின் தலைமை அமைப்பான உக்ரேனிய அமைப்பினை உருவாக்கிய Inna Shevchenko ஊடகங்களுக்குத் தெரிவித்தார். கநஅinin  அமைப்பான இப்போது பரிஸைத் தளமாகக் கொண்டு இயங்கத் தொடங்கி உள்ளது. இவர்கள் தமது போராட்டத்தை நேற்று ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பெருமளவான உல்லாசப் பயணிகள் கூடும் Musée de Louvre  இலும் வெளிப்படுத்தி உள்ளார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக