தமிழீழமே தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான ஒரே தீர்வு என்ற அடிப்படையில், சுதந்திர தமிழீழத்திற்கான வாக்கெடுப்பொன்றை ஐ.நா மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி சுமார் 5 ஆயிரம் தமிழர்கள் இன்று இலண்டன் மாநாகரில் திரண்டனர்.
தமிழகத்தில் எழுச்சி பெற்றிருக்கும் மாணவர்களின் போராட்டத்துக்கு தமது பூரண ஆதரவைத் தெரிவித்த ஆர்ப்;பாட்டகாரர்கள், தமிழக சட்டசபையில் தமிழீழ உருவாக்கத்திற்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு தமது நன்றியையும் தெரிவித்தனர்.
அதேவேளை, சிறீலங்காவினால் உலகை ஏமாற்றுவதற்காக தயாரிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் வழங்கும் எந்தத் தீர்வையும் தாம் தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிப்பதாக தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள், இனப் அழிப்பாளன் மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவியையும் பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் எரித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக