செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

ஞாயிறு, 31 மார்ச், 2013

Windows 8 இயங்குதளத்திற்கான Fresh Paint அப்பிளிக்கேஷன்



மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளமானது கணனிப் பாவனையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுவரும் அதேவேளையில் பல அப்பிளிக்கேஷன்களும் வெளிவந்த வண்ணமுள்ளன.
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது சிறியளவிலான வரைதல் மற்றும் புகைப்படங்களை எடிட் செய்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான Fresh Paint எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இம்மென்பொருளானது கவர்ச்சிகரமான பயனர் இடைமுகத்தினைக் கொண்டுள்ளதுடன் எளிமையான முறையில் கையாளக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 

மார்பக புற்றுநோயை தடுக்கும் முட்டை

alimarath.blogspot.com
 தினசரி ஒரு முட்டை சாப்பிடுபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. முட்டையானது அதிக சத்து நிறைந்த உணவு, இதற்கு அதிகம் செலவு செய்ய தேவையில்லை, தினசரி இரண்டு முட்டை சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை என்று
 alimarath.blogspot.com
1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)

2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா. 
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.
12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

வெள்ளி, 29 மார்ச், 2013

குடும்பத்தை சேர்த்து வைக்கக்கோரி பூந்தமல்லி சிறப்புமுகாமில் உண்ணா விரதம்


பூந்தமல்லி சிறப்பு முகாமில் சந்திரகுமார் என்பவர் தன் மனைவி பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ விட வேண்டும் என்று சில கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்.

இவருக்கு ஆதரவாக அவரின் மனைவி நந்தினியும் முகாம் வாயினில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஆனால் நேற்று 28ஃ03ஃ2013 இரவு 9.00 மணிக்கு மேல் நந்தினியை காவல்துறையினர் கைது செய்து அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதை கேள்விப்பட்ட சிறப்பு முகாமினுள் உண்ணாவிரதம் இருந்த சந்திரகுமார் தன்னுடைய இரண்டு கைகுழந்தைகளும் இரவு நேரத்தில் என்னவானார்கள் என்று தெரியாமல் அதிர்ச்சிக்குள்ளாகி நாற்பத்திரண்டுக்கும்

வியாழன், 28 மார்ச், 2013

இலங்கைச் சோனகர்களின் பூர்வீகம்: மறைக்கப்பட்ட உண்மைகள்


    இலங்கைத் திருநாட்டின் பூர்விகக் குடிகளான முஸ்லிம்களின் மதசுதந்திரத்தை அடக்குகின்ற, முஸ்லிம்களின் கலாசார தனித்துவத்தை கேலிக்கூத்தாக்குகின்ற, முஸ்லிம்களின் வரலாற்றைத் திரிவுபடுத்துகின்ற கைங்கரியத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுகுழுவினர் ஈடுபட்டு வருகின்றனர வரலாற்றுக் காலம் தொட்டு இற்றைவரை   இந்த நாட்டுக்காக தியாகம் செய்த, செய்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்களின் வரலாற்றைத் திரிவுபடுத்துவதில், முஸ்லிம்களை வந்தேறு குடிகளாக,, வரலாறு அற்றவர்களாக சித்தரிப்பதற்காக கங்கணம்

உலகத்தை உலுக்கியிருக்கும் பாலகன்


 alimarath.blogspot.com
கொலைகளையும் சடலங்களையும் சலனமற்றுப் பார்க்க இலங்கைப் போர் நம்மைப் பயிற்றுவித்திருக்கிறது. நாம் நிறையப் பிணங்களைப் பார்த்துவிட்டோம். தலை நசுங்கிய குழந்தைகள், மார்பகம் சிதைக்கப்பட்ட பெண்கள், குடல் பிதுங்கிய கர்ப்பிணிகள், உடல் சிதறிய போர் வீரர்கள்... நிறையப் பார்த்துவிட்டோம். ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் அந்தப் பாலகனின் புகைப்படங்கள் அத்தனை கோரமானது இல்லை. அறியாமை நிரம்பிய முகத்துடன் பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிடுகிறான். தனக்கு நேரப்போகும் கொடூரத்தை அவன் அறிந்திருக்கவில்லை. அடுத்த புகைப்படத்தில் துப்பாக்கிக் குண்டுகள் அவன் மார்பில் பதிந்திருக்கின்றன.

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை தொடரப்போகும் அமெரிக்கத் தீர்மானங்கள்

         தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள், சாட்சிகளற்ற இனப்படுகொலைகள் என்கிற எரிந்து கொண்டிருக்கும் விவகாரங்கள் குறித்து, கடந்த வருடம் நவம்பரில் சார்ல்ஸ் பெற்றி அவர்களால் உள்ளக அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
 
போர் தவிர்ப்பு வலயத்தில் என்ன நடந்தது என்பதனை ஐ.நா.பொதுச் செயலாளர் பான்.கி.மூன் அறிந்திருந்தும், மௌனமாக இருந்தார் என்று நேரடியாகக் குற்றஞ்சாட்டுகிறது பெற்றியின் அறிக்கை.

மே17 இயக்கமும் இது குறித்தான தரவுகளை ஆதாரங்களோடு முன் வைப்பதைக் காண்கிறோம்.

புதன், 27 மார்ச், 2013

6 குழந்தைகளை கொளுத்திய தந்தையின் மீதான வழக்கு விசாரணை!!!!!

பிரிட்டனில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது ஆறு குழந்தைகளை தீயிட்டுக் கொளுத்திய ஃபில்பாட்(Philpott) மீது நாட்டிங்ஹாம்(Nottingham) நீதிமன்றத்தில் விசாரணை

சிறுநீரக கற்களை கரைக்கும் எலுமிச்சை


     

                                                                                        alimarath.blogspot.com


 இன்றைய காலத்தில் பெரும்பாலும் அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுவது சிறுநீரகக் கல் ஆகும். இந்த பிரச்சனைக்கு 20 வயது இளைஞர்கள் கூட ஆளாகி அவதிப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உண்டு

ஆனால் அவற்றில் பெரும் காரணமாக இருப்பது உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்காதது, உப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உண்பது, கால்சியம் சத்துக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பது, சிறுநீர் பாதையில் கிருமி தொற்று ஏற்பட்டு, அந்த கிருமி சிறுநீர் குழாயை அரித்து புண் ஆக்கி, குழிகளை உண்டாக்குவதோடு, அந்த வழியாக சிறுநீரின் மூலம் வெளியேறும் உப்புகள் சரியாக வெளியேறாமல் தங்கிவிடுதல் போன்றவற்றால் ஏற்படும். 

அந்த பிரச்சனையை போக்க ஒரே சிறந்த வழி எலுமிச்சை சாற்றைப் பருகுவது தான். இது ஏதோ ஒரு மூடநம்பிக்கை அல்ல. ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பழச்சாறுகளை அதிகமாக பருகினால் உடலில் உப்புகள் சேருவதைத் தடுக்கலாம். அதிலம் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கும் பழங்களை சாப்பிட்டால் நல்லது.

அதிலும் அந்த சிட்ரிக் ஆசிட் எலுமிச்சையிலேயே அதிகமாக உள்ளது. அதிலும் இந்த எலுமிச்சையை சாறு பிழிந்து தண்ணீரில் கலந்து, தினமும் ஒரு வேளை பருக வேண்டும். இதனால் சிறுநீரகத்தில் உருவாகும் கல்லானது ஒன்றிலிருந்து 0.13 விகிதமாகக் குறைகிறது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறுநீரக கல்லின் வகை மற்றும் அறிகுறிகள் கால்சியம் வகை கற்கள்: 

அந்த கற்கள் சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் வெளியேறும் போது கற்கள் நகர்ந்து முதுகு வலி, சிறுநீரில் இரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். யூரிக் ஆசிட் வகை கற்கள்: இந்த பொருள் சிறுநீரில் இருக்கும் பொருள் தான். ஆனால் இது அளவுக்கு அதிகமாக சேரும் போது, அந்த பொருள் முழுவதுமாக வெளியேறாமல், உடலிலேயே தங்கிவிடும். இது அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவருக்கு ஏற்படும்.

இதனால் வயிற்றில் வலி ஏற்படும். மான் கொம்பு கற்கள்: இது மானின் கொம்பு போன்று இருக்கும். மேலும் உடலில் கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. ஏற்கனவே கற்கள் இருந்து அதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தால், அதனை சாதாரணமாக விடாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கூறுகிறார். அதே சமயம் எலுமிச்சை சாற்றையும் தொடந்து பருக வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.
                                                                                                                                          Alimarath.blogspot.com