குடும்பத்தை சேர்த்து வைக்கக்கோரி பூந்தமல்லி சிறப்புமுகாமில் உண்ணா விரதம்
பூந்தமல்லி சிறப்பு முகாமில் சந்திரகுமார் என்பவர் தன் மனைவி பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ விட வேண்டும் என்று சில கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்.
இவருக்கு ஆதரவாக அவரின் மனைவி நந்தினியும் முகாம் வாயினில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஆனால் நேற்று 28ஃ03ஃ2013 இரவு 9.00 மணிக்கு மேல் நந்தினியை காவல்துறையினர் கைது செய்து அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதை கேள்விப்பட்ட சிறப்பு முகாமினுள் உண்ணாவிரதம் இருந்த சந்திரகுமார் தன்னுடைய இரண்டு கைகுழந்தைகளும் இரவு நேரத்தில் என்னவானார்கள் என்று தெரியாமல் அதிர்ச்சிக்குள்ளாகி நாற்பத்திரண்டுக்கும் மேற்பட்ட மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்ச்சித்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்திரகுமார் தற்போது ஆபத்தான நிலையில் அவசர பகுதியில் அனுமதிக்கப்பட்டு 48 மணிநேரத்திற்கு பிறகுதான் அவரின் உடல் நிலையை பற்றி கூர முடியும் என்றி மருத்துவர்கள் சற்று முன் கூறியுள்ளார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக