செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

புதன், 24 ஏப்ரல், 2013

புத்தாடை வாங்கிக் கொடுக்காமையால் தூக்கில் தொங்கி மரணமான யுவதி


புதுவருடத்தை முன்னிட்டு தந்தை தனது இளைய சகோதரிக்கு மட்டும் புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தமையால் மனமுடைந்த சகோதரி தன்னுயிரை மாய்க்க தூக்கில் தொங்கி மரணமான சம்பவம் வவுனியா குருமண்காடு எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
சிவராசா நிதிஷா என்ற 21 வயது யுவதியின் மரணம் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் முன்னிலையில் நடைபெற்றது.

தந்தை சிவராசா சாட்சியமளிக்கையில்,
'நான் தச்சுவேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். பண வசதி போதாமையால் குடும்பத்திலுள்ள மூன்று பெண் பிள்ளைகளுக்கும் புத்தாண்டுக்கு உடுப்பு வாங்க முடியவில்லை. கடைசி மகள் இருதய வருத்தத்தினால் பாதிக்கப்பட்டவள். ஆகையால் அவளுக்கு மட்டும் உடுப்பு வாங்கிக் கொடுத்தேன். இதனால் மனமுடைந்த மகளே நுளம்பு வலைக்குள் கட்டியிருந்த கயிற்றில் தூக்கிலிட்டு மரணமடைந்துள்ளார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக