யாழில் உதயன் அலுவலகம் மீது அதிகாலையில் தாக்குதல்: அச்சு இயந்திரங்களும் எரிப்பு.
யாழ்ப்பாணத்தின் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள உதயன் நாளிதழது பிரதான அலுவலகம் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை 4.45மணியளவில் அலுவலகத்தினுள் நுழைந்த கும்பலொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பணியாளர்களையும் ஆயுத முனையில் அச்சுறுத்தி அச்சுக் கூடப்பகுதிக்குள் நுழைந்துள்ளனர். அங்குள்ள அச்சு இயந்திரங்கள் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயாகத்தினை மேற்கொண்டவர்கள் அவற்றின் மீது பெற்றோலை ஊற்றி அச்சு இயந்திரங்களையும் , அச்சுத்தாள்களையும் கொளுத்திவிட்டு சென்றுள்ளனர்.
முன்னதாக அவர்கள் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து அங்கிருந்த பணியாளர்களை விரட்டிவிட்டே அனைத்தையும் தீக்கிரையாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் நாளைய தினம் வெளிவரவுள்ள வார இதழுக்காக அச்சிடப்பட்ட நிலையிலிருந்த கட்டுரைகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. alimarath.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக