இஸ்லாத்தை அவமதித்ததாகக்கூறி இலங்கை அரச இணையத்தளங்கள் மீது ஹெக்கிங்!
இலங்கை அரசின் 3 இணையத் தளங்கள் ஹெக் செய்யப்பட்டுள்ளன.
பங்களாதேஷைச் சேர்ந்த கிரே ஹெட் வகை ஹெக்கர் குழுக்களில் ஒன்றான எப்பிளேஷ் எவர் என்ற குழுவே இவ் ஹெக்கிங் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிகின்றது.
சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு reprimin.gov.lk, ஆளும் கட்சியின் பிரதம கொறடா govtwhip.gov.lk, தெயட்ட கிருள கண்காட்சி deyatakirula.gov.lkபோன்றவற்றின் உத்தியோகபூர்வ இணைய தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்திய காரணத்தினால் இவ்வாறு தாக்குதல் நடத்தப்படுவதாக ஹெக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தக் கூடிய தகவல்கள் வெளியிடப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது குறித்த இணையத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக