செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

திங்கள், 15 ஏப்ரல், 2013

பேச்சு நடத்த தென் கொரியா விடுத்த அழைப்பை நிராகரித்தது வடகொரியா



பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென் கொரியா விடுத்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த பிப்ரவரி மாதம் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. இதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.
எனினும், மீண்டும் ஏவுகணைச் சோதனைகளை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவையும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்காவையும் தாக்குவோம் என்று வடகொரியா அறிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பதற்றத்தைத் தணிப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடகொரியாவுக்கு தென் கொரியா கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது. எனினும், இது தென் கொரியாவின் தந்திரம் என்று கூறி இந்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது. தென் கொரியா தனது மோதல் போக்கைக் கைவிடும் வரை அதனுடன் பேச்சு நடத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று வடகொரிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொரிய தீபகற்பத்தில் நிலவும் போர்ப் பதற்றம் குறித்து விவாதிப்பதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் சென்றார். அவர் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் பியூமியோ கிஷிடாவைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ""ஜப்பானின் பாதுகாப்பை உறுதிசெய்ய அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது'' என்று ஜான் கெர்ரி தெரிவித்தார்.
வடகொரியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் அரசு, தலைநகர் டோக்கியோவைச் சுற்றிலும் பேட்ரியாட் ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ளது.
இதனிடையே, ஜப்பானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இட்சுனோரி ஒனோடரா கூறுகையில், ""சர்வதேச சமூகத்தின் பேச்சைக் கேட்கும்படி வடகொரியாவை அமெரிக்கா மற்றும் ஜப்பானின் மூத்த அமைச்சர்கள் கடுமையாக வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
நாம் சர்வதேச ரீதியில் ஒருங்கிணைந்து செயல்படுவதும், அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடுமாறு வடகொரியாவிடம் உறுதியாகத் தெரிவிப்பதும் முக்கியமானவை'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக