லண்டன்; இவ்வருடத்துக்கான ஆங்கில சொல்லாக “செல்பி’ (Selfie) என்பது ஒக்ஸ்போர்ட் அகராதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
யாதேனுமொருவர் ஸ்மார்ட் போன்களையோ அல்லது வெப் கமராக்களை பயன்படுத்தி தம்மை தாமே புகைப்படுமெடுத்து அதனை சமூக வலை தளங்களில் பதிவிறக்கம் செய்வதே செல்பி என அழைக்கப்படுகிறது.
நாளுக்கு நாள் ஆங்கிலத்தின் பல்மீடிறன் அதிகரித்துச் செல்வதுடன் கடந்த வருடத்தில் 17,000 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒக்ஸ்போர்ட் அகராதி மேற்கொண்ட ஆய்வொன்றில் மாதமொன்றுக்கு 150 மில்லியன் ஆங்கில சொற்கள் இணையத்தில் பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.
அதேவேளை, ஒக்ஸ்போர்ட் நிறுவனத்தின் மென்பொருள் புதிய ஆங்கில சொற்களை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
செல்பி எனப்படும் இச் சொல் அவுஸ்திரேலிய இணையத்தள உரையாடலிலிருந்து பெறப்பட்டுள்ளது.
ஆங்கிலம் பேசும் உலகத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட செல்பி சிறப்பானதொரு அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இளைஞர்களுடன் இணைந்து புகைப்படமொன்றினை எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து செல்பிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இது தொடர்பில் ஒக்ஸ்போர்ட் அகராதிகளின் ஆசிரியர்பீட பணிப்பாளரான ஜூன் பேர்சல் இது குறித்து கருத்து வெளியிடுகையில்;
சமூக வலைத்தளங்கள் ஆங்கில சொற்களுக்கு புத்துயிர்களை அளிக்கும் அதேவேளை, புதிய சொற்களையும் உருவாக்குகின்றது எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக