ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின்
அரசாங்கத்தின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு -செலவுத் திட்டத்தை ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு
சமர்ப்பிக்கின்றார். வரவு -- செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும்
ஜனாதிபதி அது
தொடர்பில்
தெளிவுபடுத்தி விசேட உரையும் நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த
ராஜபக் ஷ தலைமையிலான 8ஆவது வரவு -செலவுத்திட்டமே இன்று
நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கின்றார்.
இன்று ஜனாதிபதியால் முன்வைக்கப்படும் வரவு– - செலவு திட்டம் மீதான
இரண்டாம் வாசிப்பு இம்மாதம் 22ஆம் திகதி நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம்
27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. alimarath.blogspot.com
வரவு– செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இம்மாதம் 29ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
அத்தோடு வரவு - செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதம் அடுத்த மாதம் 2ஆம்
திகதி ஆரம்பிக்கப்பட்டு 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவு -
செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம்
20ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த வரவு– - செலவுத்
திட்டத்தின் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்
வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு
அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிச்சலுகைகள் அதிகரிக்கப்படுமென்றும்
எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக