சிறிலங்காவில் பயன்படுத்தப்படும் கையடக்கத் தொலைபேசிகளை இலகுவில் ஹெக் செய்ய முடியும் என தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் தொழில்நுட்ப வல்லுனர்கள் மேலும் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், சிறிலங்காவின் கைபேசி பயனாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"சிறிலங்காவில் பயன்படுத்தப்படும் அதிகளவிலான கையடக்கத் தொலைபேசிகளை ஹெக் செய்து, உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும்.
சிரேஸ்ட அரசியல்வாதிகள், பாதுகாப்பு உயரதிகாரிகள், முக்கிய பிரபுக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது.
தொலைபேசி உரையாடல் அந்தரங்கத் தன்மை குறித்து கவனம் செலுத்தப்படுவதேயில்லை. alimarth.blogspot.com
வெறும் தொலைபேசி உரையாடல்கள் மட்டுமன்றி, தொலைபேசியில் உள்ளடக்கப்பட்டுள்ள குறுந்தகவல்கள், வீடியோ மற்றும் ஆடியோக்களையும் பயனருக்கு தெரியாமலேயே பெற்றுக்கொள்ளக் கூடிய அபாயம் காணப்படுகிறது.
சிறிலங்காவுக்கு எதிரான யுத்தக் குற்றச்செயல் குற்றச்சாட்டுக்களுக்கு இந்த தொலைபேசித் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய சாத்தியமும் காணப்படுறது.
திட்டமிட்ட ஹெக்கர் குழுக்கள் மூன்றாம் தரப்பின் சார்பில் இவ்வாறு தகவல்களை திரட்டி வருகின்றனர்.
குறிப்பாக அன்ட்ராய்ட் இயங்கு தளத்தை பயன்படுத்தக் கூடிய ஸ்மார்ட் போன்களை இலகுவில் ஹெக் செய்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்." என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக