செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

செவ்வாய், 22 அக்டோபர், 2013

ஹலாலை ஒழித்துக்கட்டும் போராட்டம் 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்: பொதுபல சேனா


இலங்கையில் ஹலாலை முழுமையாக ஒழித்துக்கட்டும் போராட்டத்தை மீண்டும் எதிர்வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்போவதாக பொது பல சேனா அறிவித்தது. ஹலாலுக்கு எதிரான ஆர்ப்பாட்ட வாகனப் பேரணி 22ஆம் திகதி கொழும்பிலிருந்து - கண்டி நோக்கிப் புறப்படவுள்ளதாகவும் பொதுபலசேனா தெரிவித்தது
.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொது பலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அதன் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்தார்.
தேரர் இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
ஹலால் உணவு வகைகளை சிங்கள மக்கள் உண்ண வேண்டிய அவசியமும் கிடையாது. பெளத்த நாடான இலங்கைக்கு ஹலால் சான்றிதழுடனான உணவுப் பொருட்கள் அவசியமும் இல்லை என்ற போராட்டத்தை நாம் முன்னெடுத்தோம். 
இதன் பின்னர் இச்சான்றிதழ் வழங்கப்படாது என முஸ்லிம் அமைப்புக்களால் உறுதிமொழிகள் வழங்கப்பட்டதோடு ஊடகங்களில் விளம் பரங்களும் பிரசுரிக்கப்பட்டன. ஆனால், உறுதிமொழிகள் நிறை வேற்றப்படவில்லை. எனவே, ஹலாலை முற்றாக ஒழிக்கும் போராட்டத்தை எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிக்கின்றோம்.          alimarath.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக