கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி குற்றத்தை ஒப்புக் கொண்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தென் இந்திய ஊடகமொன்றுக்கு செவ்வி அளித்ததாக அசாத் சாலி மீது புலனாய்வுப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வதாகவும் இதற்காக வருந்துவதாகவும் தெரிவித்து அசாத் சாலி கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த ஊடகத்திற்கு அளித்த செவ்வி வருத்தமளிப்பதாகவும், சில விடயங்கள் மிகைப்படுத்தப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட காரணத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அசாத் சாலியை விடுதலை செய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளை ஜனாதிபதி உகண்டா விஜயம் செய்ய உள்ளதனால் அதற்கு முன்னதாக அசாத் சாலி விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அசாத் சாலியை விடுவிக்க வலியுறுத்தி கிழக்கி மாகாணத்தில் நேற்றைய தினம் ஹர்த்தால் ஒன்றும் நடத்தப்பட்டுள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக