மடிக்கக் கூடிய ஸ்மார்ட் போன்: இவ்வருட இறுதியில் எல்.ஜி. யிடமிருந்து!
எல்.ஜி. ஸ்மார்ட் போன்களின் விற்பனை சந்தையில் நல்ல நிலையில் உள்ளது. அதுமட்டுமன்றி கடந்த வருடத்தை விட இவ்வருடம் விற்பனை அதிகரித்துள்ளதாக அதன் காலாண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
" காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்ற பழமொழிக்கேற்ப விற்பனை வளர்ச்சியடைந்து வருகின்றமையை கருத்தில் கொண்டு புது உற்பத்திகளை அறிமுகப்படுத்தி சந்தையை தக்கவைத்துக்கொள்ள முயன்று வருகின்றது எல்.ஜி. .
இதன் ஒரு அங்கமாக மடிக்கக் கூடிய திரையைக் கொண்ட ஸ்மார்ட் போனை எல்.ஜி இவ்வருட இறுதியில் அறிமுகப்படுத்துமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதற்கென மடியக்கூடிய OLED (organic light-emitting diode) திரையை எல்.ஜி. தற்போது தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வளைந்துகொடுக்கக்கூடிய சிப் மற்றும் பெட்டரியையும் தயாரிக்க வேண்டிய தேவையுள்ளதையும் எல்.ஜி. நிறுவனத்தின் உப தலைவர் யோன் பூ- ஹயூன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் கூடிய விரையில் மடியக்கூடிய ஸ்மார்ட் போன்கள் சந்தைக்கு வரும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
எல்.ஜி. மட்டுமன்றி செம்சுங், நொக்கியா போன்ற நிறுவனங்களும் மடியக் கூடிய ஸ்மார்ட் போன்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.
கடந்த 2011 ஆம் ஆண்டு மடியக்கூடிய திரையை நொக்கியா அறிமுகப்படுத்தியிருந்தது.
நமது கரங்களிலும் மடியக் கூடிய ஸ்மார்ட் போன்கள் காணப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக