செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

திங்கள், 6 மே, 2013

சிரியா மீது 2ஆவது முறையாக இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்


சிரியாவின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கு அனுப்புவதற்காக ஆயுதங்களை தேக்கி வைத்திருந்த கிடங்கின் மீது இஸ்ரேல் நாட்டு போர் விமானங்கள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலில் ஆயுத கிடங்கு முற்றிலுமாக சேதமடைந்தது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி நிலையம், வேறொரு பகுதியில் உள்ள போர் விமான எதிர்ப்பு தளம் மற்றும் ஆயுத கிடங்கின் மீது அத்துமீறி பறந்த இஸ்ரேல் போர் விமானங்கள் இன்றும் அதிரடியாக தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலில் ஈரான் நாட்டிலிருந்து வாங்கப்பட்ட அதிநவீன ஏவுகணைகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 20 சதுர கி.மீட்டர் பரப்பளவு தூரத்திற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது போல் பூமி அதிர்ந்ததாகவும், வானம் முழுவதும் செந்நிற தீப்பிழம்புகளும், கரும்புகையும் காணப்பட்டதாகவும் உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக