பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளான கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய பகுதியில் மீண்டும் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதிகளுக்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொல்லுகள் போத்தல்கள் கொண்டு தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் இதனால் பலர் காயமடைந்துள்ளதோடு வீடுகள் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த பதற்ற நிலை தொடருமானால் இன்றும் 12 மணிநேர ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக